பெருக்கு

 பெருக்கு

துயில் கலைந்து

விழி திறக்குமுன்

மனம் விழிக்கையிலேயே

அவள் முகம் தோன்றுகிறதே!

துளிநீர் கசியும் இடத்தில்

சிறுகல் வைப்பதைப்போல

அம்முகத்தை மறக்க முயன்றேன்,

கல் வைத்ததால்

ஊற்றுமுகம் திறந்து

தடுக்க முடியாவண்ணம்

பீறிட்டு பெருகுகிறது..

அவளின் நினைவுகள்

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

களிறன்ன நறுமாமலர்

ஆழ்ந்ததால் திரண்டவை

கோர்க்கப்பட்ட பட்டயங்கள்