இடுகைகள்

கைமாறு

படம்
                 மூடியிருந்த ஜன்னல்களின் சிறிய இடைவெளிகளில் பனிக்காற்று பீறிட்டு உள்நுழைந்தது. தட் தட் எனக்கேட்கும் ஒலி எத்தனை விரைவாகக் கேட்கிறது என்பதை வைத்து ரயிலின் வேகத்தை உணர முடிந்தது. மெல்லிய பனி பலநூறு நுண்முட்களால் சந்துருவின் மேனியை துளைத்து உள்நுழைந்தன. கடும் வெயிலின் தகிப்பு சந்துருக்கு பொருட்டாகத் தெரிந்ததில்லை. ஆனால் பனியின் மென்தைப்பை அவனால் தாங்க முடியவில்லை. கைகளை கட்டிக்கொண்டு உடலை ஒடுக்கியபடி கழிவறையை ஒட்டிய பாதையில் அமர்ந்திருந்தான்.  அவனைப் போலவே இன்னும் பலரும் அமர்ந்திருந்தார்கள். ஓரமாக இவர்களின் பைகள் குவியலாக கிடந்தது. சந்துரு மற்றவர்களைப் பார்த்தான். பெரிதாக வருந்தாமல் துண்டையோ லுங்கியையோ போர்த்திக் கொண்டு சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். இருவர் கால்களை நீட்டியபடியும் மற்றவர்கள் இவனைப் போல கால்களை கையால் கட்டியபடியும் இருந்தார்கள். சந்துருக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையினால் முன்பதிவில்லாத இந்தப் பெட்டியில் இப்படி அமர வேண்டியதாகி விட்டது. இங்கே அமர்ந்து இப்படிக் குறுக வேண்டியதாகி விட்டதே என்ற எண்ணம் எழுந்ததும...

நீர்வழிப் படூஉம் புணைபோல…

படம்
                   இவ்வளவு தூரம் நடந்து வந்த சாலை இடதுபுறமாக வளைந்து செல்லும் இடம் வந்ததும் , நேராக தெற்கில் இருக்கும் தன் ஊரை நோக்கிச் செல்வதற்காக சாலையைவிட்டு சரிந்து இறங்கிய ஒற்றையடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தார் கர்ணன். இந்தப் பாதை வயல்களின் வரப்புகளை வாகனமாகக் கொண்டது. மார்கழி மாத வயல்களில் மஞ்சளும் கரும்பச்சையுமான நெற்பயிர்கள் பொன்னிறக் கதிர்களைச் சூடிய தலையை கிறக்கத்துடன் லேசாக அசைத்துக் கொண்டிருந்தன. பரந்து விளைந்திருந்த வயல்வெளியைப் பார்த்தவுடன் மனதில் ஏற்பட்ட ஏதோவொரு நிறைவில் கர்ணனின் கண்களில் நீர் துளிர்த்து இருதுளிகள் கன்னத்தில் சிந்தியது.                சூரியன் மறையப் போவதைப் பார்த்து கையிலிருந்த ஹெச்.எம்.டி கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஐந்தரை ஆனது. பெருமாள் இறந்த செய்தியை ராமன் போனில் சொன்னவுடன் இருட்டுவதற்குள் ஊருக்குள் சென்றுவிடலாம் என்றுதான் முதலாளியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு மனைவியிடம் சொல்லிவிட்டு திருச்சியிலிருந்து கிளம்பினார். பேருந்து தாமதமாக ...