இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பருவத் தொடக்கம் (கவிதை)

படம்
பருவத் தொடக்கம்  சூழ்ந்தவையெல்லாம் தெளிவின்றி தெரியும் வேறந்த ஓசையும் செவியுள் புகாது காண்பதெல்லாமே அழகோவியமாய் தோன்றும் உள்ளும் புறமும் மென்குளுமை படரும் வானெங்கும் மின்னொளி  விட்டுவிட்டுச் சுடரும் காத்திருப்பு வீணல்லவென்ற எக்களிப்பு பொங்கும் வருவதற்கான அறிகுறிகளெல்லாம் அமைகிறது இனியதாகவே பொழிந்தபின்தான் தெளியும் … வாழவைக்கிறதா அன்றி அழித்துக் கடக்கிறதா என காதலுக்கும் மழைக்கும் வேறுபாடு ஏதுமில்லை பருவம் தொடங்குவதில் (சொல்வனம் இதழில் நவம்பர் 10, 2019 அன்று வெளியான கவிதை)

கரவுப்பழி

படம்
 கரவுப்பழி (சிறுகதை) வானம் நீல நிறத்திலிருந்து   கருமையாக மாற ஆரம்பித்த மாலை நேரத்தில் மூன்று பெண்களும் வேணியம்மை கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். இரு புறமும் வேலிக்கிலுவைகளும் கழியந்தட்டையும் வளர்ந்து எல்லையமைக்க, நீண்டு சென்ற  ஒழுங்கையில் ஊருணியைக் கடந்து நடந்தார்கள்.   ஊருணிக் கரையிலிருந்த ஆலமரத்தில் சாக்குகளில் கட்டப்பட்டிருந்த ஈன்ற பசுக்களின் நஞ்சுக் கொடிகளிலிருந்து நாசியைத் தொட்டுச் செல்லும் துர்மணம் இன்று இயல்பை விட  கடுமையாக இருந்தது. சாலாட்சியும் காவேரியும் முன்னால் செல்ல அவர்களை ஒட்டி பின்னால் ராசாத்தி சென்றாள். மனிதர்களும் ஆடு மாடுகளும் நடந்து நடந்து  மென்மையாக மாறிய மணலில் நடக்கும்போது உள்பாதங்களில் எப்போதும் தோன்றும் மெல்லிய சிலிர்ப்பை தற்போது அடையாமல் தங்களுக்குள் ஆழ்ந்தவர்களாக நடந்தார்கள்.           தொலைவில், வேலங் கண்மாயின் நீர் தரையில் காயப்போட்ட சேலைபோல லேசாக நெளிந்து கரையில் மோதிக்  கொண்டிருந்தது.  புதுப்பட்டி செல்லும் கண்மாயை கடந்து செல்லும் பாதையிலிருந்து விலகி மேற்கில்...