இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தோற்றங்கள்

படம்
                            சந்திரன் வாசலில் நின்றபடியே தெருவில் வருபவர்களையும் வீட்டினுள் கண்ணாடிப் பெட்டியினுள் கிடத்தப்பட்டிருந்த அம்மாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். சந்திரனின் மனைவி சுந்தரியும் பத்தாம் வகுப்பு பயிலும் மகள் அகல்யாவும் அம்மாவின் தலைமாட்டில் தரையில் அமர்ந்திருந்தார்கள்.                கல்லூரியில் பயிலும் மகன் பிரபா கடைகளுக்கு அலைந்து கொண்டிருந்தான். முதலில் கண்ணாடிப் பெட்டியை வரவழைத்தவன் சாமியானாவிற்கும் நாற்காலிகளுக்கும் சொல்லிவிட்டு வந்தான். இப்போது , இறுதிச் சடங்கிற்கான காரியங்களை செய்பவர்களை பார்த்துவிட்டு மயானத்திற்கும் சென்று பேசிவிட்டு வருவதற்காக சென்றுள்ளான். தெருவுக்கு குறுக்கே பந்தல் போடப்பட்டிருந்தது. தெருவின் இரு பக்கமும் நீளவாக்கில் நாற்காலிகளை பிரித்துப் போட்டிருந்தார்கள். தகவல் தெரிந்து வருபவர்கள் சந்திரனைப் பார்த்து , இவனுடனான அணுக்கத்திற்கேற்ப கையை குலுக்கியோ அல்லது தோளை அணைத்துவிட்டோ உள்ளே சென...

நெசவென இழுபடும் வாழ்வு

படம்
      நூல் : அம்மன் நெசவு ஆசிரியர் : எம். கோபாலகிருஷ்ண ன் பதிப்பகம் : தமிழினி வெளியீடு *****                  எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனின் முதல் நாவல் “அம்மன் நெசவு”. இந்நாவல் வெளிவந்து இருபத்தி மூன்று ஆண்டுகளாகின்றன. இவரது பிற நாவல்களான மணற்கடிகை , மனைமாட்சி , தீர்த்த யாத்திரை மற்றும் வேங்கை வனம் ஆகியவற்றை ஏற்கனவே வாசித்தபின் முதல் நாவலை வாசிப்பது புதுவித உணர்வை அளிக்கிறது.                    எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனின் பிற நாவல்கள் பக்க அளவில் பெருநாவல்கள் எனக் கூறத்தக்கவை. அம்மன் நெசவு நூல் பக்க அளவில் சிறியதாக இருப்பினும் அது பேசும் களம் பெருநாவல்களுக்கு சற்றும் குறைவானதில்லை.     அந்நியர்களின் படையெடுப்பால் உஜ்ஜயினியிலிருந்து துங்கபத்திரை நதிக்கரையில் சிலகாலம் வாழ்ந்து அங்கிருந்தும் கிளம்பி திருப்பூர் அருகே தங்கி வாழ்ந்த நெசவாளர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது இந்நாவல். அவர்கள் தங்களு...