இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிலாகிப்பை சிலாகித்தல்

படம்
        நூல் : நறுமணத் துயரே...   நறுமணத் துயரே ஆசிரியர்: இசை பதிப்பகம்: விஷ்ணுபுரம் பதிப்பகம்        மரபான நூல்களை வாசகர்களிடம் பரவலாக்குவதற்கு சில வழிகள் உள்ளன. அந்நூல்களுக்கு புதிதாக உரை எழுதுவது பெரும்பாலானவர்கள் செய்வது. அந்நூலிலுள்ள ஏதாவது ஒரு பொருண்மையை மட்டும் எடுத்துக் கொண்டு விரிவாக ஆய்வது இன்னொரு வழி.         இவற்றிலிருந்து மாறுபட்டு   கவிஞர் இசை "நறுமணத் துயரே...   நறுமணத் துயரே" நூலில் கம்பராமாயணத்திலுள்ள காதல் பாடல்களை எடுத்துக் கொண்டு அதனை அவர் எப்படி ரசித்தார் என்பதை விவரித்துள்ளார். கவனிக்க... எப்படி ரசிக்கவேண்டும் எனக் கூறவில்லை, அவர் ரசித்ததை கூறியுள்ளார். இதுவே நவீனக் கவிஞன் செய்ய வேண்டியது எனக் கருதுகிறேன்.      இவ்விசயத்தில் கவிஞர் இசை முதல் நபரல்ல. டி.கே.சிதம்பரநாத முதலியார் கம்பரின் பாடல்களை ஆழ்ந்து பயின்று கம்பர் இயற்றிய பாடல்கள் என தான் கருதியவற்றை மட்டும் தனியே வகைப்படுத்தி அவற்றிற்கு உரையும் எழுதியுள்ளார். வட்டத் தொட்டி என வழங்கப்பட்ட இலக்கிய சங...