இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காணிக்கை

படம்
  ஸ்ரீனிவாசன் வரவேற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தான். இவனுடைய அண்ணன் ராமச்சந்திரனின் மகனுக்கு திருமணம். எழுபது வயதான அப்பா பட்டாபி மணமேடையில் ஓரமாக இடப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருந்தாலும். மணமக்களை பார்ப்பதைவிட மண்டபத்திற்குள் நுழைபவர்களைத்தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் சற்று பதட்டமாக இருப்பதாக இவனுக்குத் தோன்றியது. அண்ணனும் அண்ணியும் மணமேடையிலேயே நிற்கிறார்கள். எத்தனை திருமணங்களில் கலந்து கொண்டிருந்தாலும் , திருமணத்தை நடத்துவதற்காக மேடையில் சேகரித்து வைக்கும் பொருட்களில் ஒன்றிரண்டு மறதியில் விடுபடத்தான் செய்கிறது. அதை எடுத்துக் கொடுப்பதற்காக அவர்களுக்குத் துணையாக இவன் மனைவியும் மேடையிலேயே உடன் நிற்கிறாள். இவனும் அங்குதான் நின்றிருந்தான். அப்பா பட்டாபிதான் இவனை அழைத்து சிவலாங்குடியிலிருந்து வருபவர்களை மரியாதையுடன் அழைத்து வருமாறு கூறினார். அப்போதுதான் அப்பாவின் பதட்டத்திற்கான காரணம் புரிந்தது. மண்டபத்தின் தரைத் தளத்தில் உணவுக்கூடமும் முதல்தளத்தில் மணமேடையும் அமைந்திருக்கிறது. தாமத முகூர்த்தம் என்பதால் திருப்பூட்டுக்கு முன்னதாகவே காலைப் பந்தி முட...