இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பற்றற்ற பறவை

படம்
  நூல்: சொர்க்கத்தின் பறவைகள்   ஆசிரியர்: அப்துல்ரஸாக் குர்னா   மொழிபெயர்ப்பாளர்: லதா அருணாச்சலம்   பதிப்பகம்: எதிர் வெளியீடு 2021- ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற   அப்துல்ரஸாக் குர்னா   எழுதிய நாவல்களில் ஒன்றான “ Paradise” நாவல் லதா அருணாச்சலம் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு “சொர்க்கத்தின் பறவைகள்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.         ஏறக்குறைய தமிழிலேயே எழுதி வெளிவரும் நூல்களுக்கு இணையாகவே மொழிபெயர்ப்பு நூல்களும்   வெளிவருவதை சில வருடங்களாக காணமுடிகிறது. குறிப்பாக எதிர் பதிப்பகமும் தமிழினி பதிப்பகமும் இதில் முன்னணியில் உள்ளன. மொழிபெயர்ப்பு நூல்களின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதால் மொழிபெயர்க்கப்படுகிறதா அல்லது கிடைப்பதால் வாசகர்கள் விரும்புகிறார்களா என்பதை அறுதியிட்டுக் கூறுவது கடினம்.           பொதுவாக இலக்கியத்தை வாசிக்க தூண்டுவது ஒரே உடலைக் கொண்ட வாழ்வில் பல வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதுதான். அதாவது பௌதிகமான உடலுக்கு வ...

பயிரை மேயும் வேலிகள்

படம்
  நூல் : சிசு ஆசிரியர் : பிரதீபா சந்திரசேகர் பதிப்பகம்: வாசகசாலை      தினந்தோறும் சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் பற்றிய செய்தி வந்துகொண்டேயிருக்கிறது. இது தொடர்வதாலேயே அச்செய்திகளை "ஆங், அதனாலென்ன"... என்ற சலிப்புடன் கடக்கிறோம். பாதிப்படையும் சிறுமிகளைப் பற்றி ஒரு கணமும் எண்ணுவதற்கு நமக்கு நேரமில்லை. அந்தளவிற்கு பணி சார்ந்த அழுத்தமும் குடும்பப் பிரச்சனைகளும் அப்படி இல்லாதவர்களுக்கு சமூக வலைதள ஈர்ப்பும் உள்ளன.     "சிசு" என்ற தன் முதல் நாவலில் பிரதீபா சந்திரசேகர் பாலியல் வன்முறையால் பாதிப்படையும் சிறுமியின் வாழ்க்கையை காட்டுகிறார். அப்பெண், தான் மிகவும் விரும்பும் நபரால் அவ்வன்முறை நிகழ்வதை நம்பமுடியாமல் அதிர்ந்து அதனை சொல்வதற்கும் யாருமில்லாத நிலையில் தவிப்பதையும் விவரித்துள்ளார்.          இளவயதில் உடலளவில் ஏற்படும் பாதிப்பு உள்மனதில் தீராத காயத்தையும் உண்டாக்குகிறது. பிறர் செய்யும் குற்றம் அப்பெண்ணை குற்றவுணர்வுக்கு ஆட்படுத்தும் வகையில்தான் சுற்றமும் சமூகமும் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணை ந...